பெங்களூர்:இரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
கடந்த 2015ஆம் வருடம் மார்ச் 16 அன்று ஐ ஏ எஸ் அதிகாரியான டி. கே. ரவி மரணம் அடைந்தார். இது பற்றி அப்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணி புரிந்த அர்னாப் கோஸ்வாமி ஒரு செய்தித் தொகுப்பை பதிந்திருந்தார். அதில், அப்போது கர்நாடகா அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் தான் இந்த மரணத்துக்கு காரணம் என்றும், அமைச்சர் சாட்சியங்களை கலைக்க முயல்வதாகவும் அர்னாப் தெரிவித்திருந்தார். அதற்காக இப்போது ஒரு மானநஷ்ட வழக்கு ஒன்றை அர்னாப் கோஸ்வாமி மேலும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மேலும் ஜார்ஜ் தொடர்ந்துள்ளார்.