டெல்லி:வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு சீக்கிய குருத்வாராவைச் சேர்ந்த சீக்கியர்கள் உணவு அளித்து உதவி செய்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ‘பங்ளா சாஹிப் குருத்வாரா’ அமைப்பைச் சேர்ந்த சீக்கியர்களே தமிழக விவசாயிகளுக்கு நாள்தோறும் சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாதம், உள்ளிட்ட உணவுகளை இலவசமாக அளித்து அவர்களின் பசியை போக்கி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் வெறும் வயிறுடன், பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த உணவை சமைத்து சீக்கியர்கள் எடுத்து வருகின்றனர்.