மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை பின்பற்ற முடியாது – மேற்குவங்க அரசு

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை பின்பற்ற முடியாது என மேற்குவங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

unknown node

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை பின்பற்ற முடியாது என மேற்குவங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி நிகழ்ச்சி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும், அதில் கூறியபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் எனவும், அம்மாநில பள்ளிக் கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, இது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மம்தா பானர்ஜி வேண்டுமென்றே எதிர்க்க ஒரு வழிமுறை என்றார்.

மேலும் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை எதிர்ப்பதன் மூலம் தேசிய விரோத நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்றும், மாநில் அரசின் பள்ளிக்கல்வி துறைக்கு பெரும்பான்மையான நிதியை மத்திய அரசே அளித்து வருகிறது, எனவே அந்நிதி சரியான முறையில் சென்றடைகின்ற வழிமுறையை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை என்றும் கோஷ் கூறினார்.