இரண்டு உலககோப்பையில் 3 நட்சத்திர வீரர்களை வீழ்த்திய கிறிஸ் கெய்ல்!

நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு .முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டை 286 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம்  தோல்வியை தழுவியது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆன கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 84 பந்தில் 87 ரன்கள் குவித்தார்.அதில் பவுண்டரி 8 , சிக்ஸர் 6 விளாசினார்.அவரின் அதிரடி ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்களை சேர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.கிறிஸ் கெய்ல் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரோஸ் டெய்லர் விக்கெட்டை நேற்று பறித்தார்.இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் கிறிஸ் கெய்ல் தனது முதல் விக்கெட் பதிவு செய்தார்.இந்நிலையில் கடந்த உலகக்கோப்பையில் இருந்து நேற்றைய போட்டி வரை மூன்று நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Ross Taylor (2019)*Hashim Amla (2015)Faf Du plessis (2015)