அதிமுகவில் உள்ளுக்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளின் மோதல் இருப்பதை அவ்வப்போது நிருபிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் மோதல் நடக்கிறது. அவர் அனைத்து இலாகாக்களுக்கும் அமைச்சர் என இன்று மதுசூதனன் கிண்டல் அடித்தார்.தர்மயுத்தம் நடத்திய பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்தாலும், ஜெயலலிதா காலத்து பகையை மதுசூதனனும், ஜெயக்குமாரும் விடத்தயாராக இல்லை என்பதை பல முறை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
unknown nodeஓபிஎஸ் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது அதிமுகவின் உயர்ந்த பதவியான அவைத்தலைவர் பதவியிலிருந்த மதுசூதனன் விலகி திடீர் ஆதரவு கொடுத்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் ஜெயக்குமார் இருக்கும் இடத்தில் மதுசூதனன் இருக்க மாட்டார் என்பது வடசென்னை அரசியல் அறிந்த சிலருக்கு மட்டுமே தெரியும்.அதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன் போட்டியிட அவருக்கு எதிராக எதிர் அணியில் ஜெயக்குமார் இருந்ததால் உற்சாகமாக வேலை நடந்தது. ஆனால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் அணிகள் மாற ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைய எதிர் வேட்பாளர் மதுசூதனன் அதிமுக வேட்பாளராகவும், அதிமுக வேட்பாளர் தினகரன் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர்.
unknown nodeவேட்பாளர் தேர்விலேயே மதுசூதனனை ஓரங்கட்டும் வேலைகள் நடந்தது, அதில் தனக்கு ஏரியா அமைச்சர் ஒத்துழைப்புத் தரவில்லை என்று அப்போது மதுசூதனன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதை ஜெயக்குமார் மறுத்தார்.தேர்தல் தோல்விக்கு பின்னர் மதுசூதனன் ஜெயக்குமார் உரசல் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் ஜெயக்குமார் மீது நேரடியாக முதல்வரிடம் புகார் அளித்தார் மதுசூதனன். இந்தவிவகாரமும் பின்னர் பேசி முடிக்கப்பட்டு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனாலும் உரசல் நின்றபாடில்லை.
ராயபுரம், ஆர்.கே நகர் பகுதியில் அதிமுக ஒன்றாக இருந்தாலும் மதுசூதனன், ஜெயக்குமார் அணிகள் தனித்தனித்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் சமீப காலமாக ஜெயக்குமார் தினமும் செய்தியாளர்களை சந்திப்பதும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பதிலளிப்பதையும் இன்று மதுசூதனன் நாசுக்காக கிண்டலடித்தார்.
ஆர்.கே.நகரில் மீன் கழிவுகளை அகற்றும் பணியை பார்வையிட்ட மதுசூதனனிடம் ஜெயக்குமார் குறித்த பேச்சு வந்தபோது அவர் மீன்வளத்துறை அமைச்சர் என்பதை மறந்துவிட்டார் என்று கிண்டலடித்த மதுசூதனன் பேசியதாவது:“அவரது தொகுதியை மட்டுமே கவனிக்கிறார், அவரவர் பிள்ளையை அவரவர் மட்டும்தானே பார்க்கமுடியும். அவர் மீன்வளத்துறை அமைச்சர் மட்டுமல்ல பல இலாகாக்கள் பார்க்கும் அமைச்சர்.” இவ்வாறு அவர் கிண்டலடித்தார்.இது அதிமுக வில் மீண்டும் மோதல் போக்கை உண்டாக்கியுள்ளது.
DINASUVADU