தங்கம் விலை ரூ.1,200 உயர்வு...அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நீடித்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,200 உயர்வு பெற்றுள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் ரூ.1,14,880-க்கு விற்பனையான தங்கம், நேற்று ரூ.1,13,680-க்கு குறைந்திருந்தது. ஆனால் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,80,000 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்றைய உயர்வு சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை தங்கம் விலை ஏற்ற இறக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.நகை வாங்குவோர் இந்த விலை உயர்வை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.