விஜயின் பேச்சு ஒரு கானல் நீர் போன்றது என்று வடசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
unknown nodeஆளுநர் என்பவர் மாநிலத்தின் நிர்வாக தலைவர். அந்த அடிப்படையில் முதலமைச்சர் அவ்வப்போது மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள், சூழ்நிலைகள் குறித்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவித்து வந்துள்ளார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. டிடிவி தினகரனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார் என்ற செய்திக்கு துணை முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கமே போதுமானது.தொடர்ந்து பேசிய அவர் அரசியல் என்பது பெரிய கடல். இதில் யார் வேண்டுமானலும் குதிக்கலாம். இதில் கரை சேருபவர்கள் தான் முக்கியம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அது தவறு இல்லை. அவரின் போக்கிரி படத்தில் அவர் பேசிய நான் ஒருவாட்டி முடிவு செய்தால் பின்னர் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்ற வசனத்தை மட்டும் அவருக்கு நினைவுபடுத்துகிறேன். அவர் பேச்சு ஒரு கானல் நீர்போன்றது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
DINASUVADU