ஷிகர் தவனை நோக்கி கையசைத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு அபராதம் !

தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு  ,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த அபராதம்

தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு  ,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

5 வது ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்ற போது ரபடா வீசிய பந்தில் ஷிகர் தவன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவானை நோக்கி கையசைத்து விடை கொடுத்த ரபடா பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை காட்டினார்.

ரபடாவின் நடத்தை குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 விழுக்காடு அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.