அணு ஆயுத பரிசோதனைக் கூடம் அழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பன்னாட்டு செய்தியாளர்கள் பலரும் வடகொரியா சென்றடைந்தனர்.
unknown nodeஅமெரிக்க அதிபர் உடனான பேச்சுவார்த்தையை முன்னிட்டு, பங்க்யே – ரியில் உள்ள அணு ஆயுத பரிசோதனைக் கூடத்தை நிர்மூலமாக்குவதாக வடகொரியா அறிவித்தது.
unknown nodeஇதை உறுதி செய்வதற்காக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களையும் வடகொரியா அழைத்திருந்தது.
unknown nodeஇதை அடுத்து, அஸ்ஸோசியேட் பிரஸ், சி.என்.என்., சி.பி.எஸ்., ரஷ்யா டுடே, உள்ளிட்ட செய்தி இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் பத்திரிக்கையாளர்கள், விமானம் மூலம் வடகொரியா சென்றடைந்தனர்.