ராஜநாகத்துக்கு முத்தம் தீயணைப்பு வீரர், ராஜநாகம் கடித்ததால் உயிரிழந்தார்!

ராஜநாகம் கடித்ததால் மலேஷியாவில் கொடிய பாம்புகளுக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் பிரபலமான தீயணைப்பு வீரர்  உயிரிழந்தார்.

ராஜநாகம் கடித்ததால் மலேஷியாவில் கொடிய பாம்புகளுக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் பிரபலமான தீயணைப்பு வீரர்  உயிரிழந்தார்.

unknown node

மலேஷியத் தீயணைப்பு வீரரான அபு ஸரின் ஹசின் (Abu Zarin Hussin) கொடிய விஷப் பாம்புகளைப் பிடிப்பதில் வல்லமை பெற்றவர். கொடிய பாம்புகளுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் இணையதளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகழ் பெற்றவர்.

unknown node

அபு ஸரின் ஹசின் பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் ராஜநாகம் ஒன்றை பிடிக்க முயன்றபோது அந்தப் பாம்பு கடித்ததையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

unknown node

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். ராஜநாகம் கடித்தால் யானையே உயிரிழந்துவிடும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மிகச் சிறப்பான தீயணைப்பு வீரரை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ராஜநாகத்துக்கு முத்தம் தீயணைப்பு வீரர், ராஜநாகம் கடித்ததால் உயிரிழந்தார்!