துணை ஜனாதிபதி தேர்தல் LIVE: 3pm வரை 96% க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 96.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் துணை

unknown node

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 96.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் துணை அதிகாரி முகுல் பாண்டே கூறுகையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய 785 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 713 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 96.94 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் மத்திய அமைச்சரும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான வெங்கையா நாயுடு, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் அறை திறக்கும் முன்பே, பிரதமர் நரேந்திர மோடி வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார்.

பிறகு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். மற்றொரு வேட்பாளரான கோபால கிருஷ்ண காந்தி தனது வாக்குகளைப் பதிவு செய்தார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் உடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் சிறப்பு பேனாவைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.