நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.
unknown nodeபின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியும் ,இலங்கை அணியும் மோத உள்ளது.
unknown nodeஇப்போட்டியானது பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட்மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இது மூன்றாவது போட்டி இதற்கு முன் இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி தோல்வியைத் தழுவியுள்ளது.இரண்டாவது வெற்றிக்காக இன்று இந்த இரு அணிகள் மோத உள்ளது.இந்த இரண்டு அணிகளும் இதுவரை 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் பாகிஸ்தான் 90 போட்டிகளிலும், இலங்கை 58 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
unknown nodeமேலும் ஒரு போட்டி டிரா ஆனது. 4 போட்டிகள் ரத்தானது.கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி வாகை சூடியது. ஆகவே ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே பாகிஸ்தான் அணியின் கை ஓங்கியுள்ளது.இந்நிலையில் இதற்கு முன் உலக கோப்பையில் இந்த இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் மோதி உள்ளது. அவற்றில் ஒரு போட்டியில் கூட இலங்கை வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.