2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் அடித்தது போல அடித்து வரும் ரோஹித்!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ,இந்திய அணி மோதியது.இப்போட்டி நேற்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில்

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ,இந்திய அணி மோதியது.இப்போட்டி நேற்றுஎட்க்பாஸ்டன் மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்தது. பிறகு 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து  306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனும் ,தொடக்க வீரருமான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி109 பந்தில் 102 ரன்கள்குவித்தார்.இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா அடித்தமூன்றாவது சதமாகும் .

இந்நிலையில்  2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ரன்களை போலவே ரோஹித் சர்மாவும் அடித்து உள்ளார்.2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் சச்சின்  இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்னிற்கு மேல் அடித்தார். அதே போல நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 ரன்னிற்கு மேல் ரோஹித் சர்மா அடித்தார்.

மேலும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் சச்சின் அடித்த ரன்களை போல ரோஹித் சர்மாவும் நடப்பு உலகக்கோப்பையில் ரன்கள் அடித்து உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 2011 உலகக்கோப்பை:

100+ vs இங்கிலாந்து100+ vs தென்னாப்பிரிக்கா85+ vs பாகிஸ்தான்50+ vs ஆஸ்திரேலியா

ரோஹித் சர்மா 2019 உலகக்கோப்பை:

100+ vs இங்கிலாந்து100+ vs தென்னாப்பிரிக்கா85+ vs பாகிஸ்தான்50+ ஆஸ்திரேலியா