RSS சுய புராணமே இனி பள்ளிகளின் வரலாறு...!

உத்திரபிரதேச பாரதிய ஜனதா கட்சி வரும் ஆகஸ்டு 26 -ம் தேதி தமது முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நடத்த உத்தேசித்துள்ளது.

unknown node

உத்திரபிரதேச பாரதிய ஜனதா கட்சி வரும் ஆகஸ்டு 26 -ம் தேதி தமது முன்னாள் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நடத்த உத்தேசித்துள்ளது. இதையொட்டி #பொது_அறிவுப்_போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதற்காக 70 பக்கங்களுக்கு பாரதிய ஜனதா தயாரித்துள்ள நூலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளில் சில;1. “இந்தியாவை இந்து நாடென்று சொன்னவர் யார்?”பதில் : டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.2. சிகாகோவில் நடந்த ‘தர்ம சபாவில்’ எந்த மதத்தை விவேகானந்தர் முன்னெடுத்துச் சென்றார்?பதில் : #இந்துத்துவம்3. எந்த இசுலாமிய படையெடுப்பாளரை சுஹேல்தியோ மகாராஜா துண்டுத் துண்டாக வெட்டினார்?பதில் : சையது சலார் மசூத் கஜினி4. ஹரிஜன்கள் குறித்து #காந்தி மற்றும் காங்கிரசின் கருத்துக்களுக்கு மறுப்பாக #அம்பேத்கர் எழுதிய நூலின் பெயர் என்ன?பதில் : காந்தியும் காங்கிரசும் செய்தார்கள் (Congress and Gandhi have Done)மேற்கண்ட உள்ள கேள்வி – பதில்களின் தரத்தையும் யோக்கியதையையும் பார்த்தாலே இது #பாரதிய_ஜனதா கும்பலின் தயாரிப்பு என்பது உங்களுக்கு புரியும்.சிகாகோவில் #விவேகானந்தர் இந்துத்துவத்தின் சார்பாகச் செல்லவில்லை என்பதோ, இந்து மதத்தின் சார்பாக சென்றார் என்பதோ, அம்பேத்கர் எழுதிய நூலின் முழுப் பெயர் “தீண்டத்தகாதவர்களுக்கு காந்தியும் காங்கிரசும் செய்ததென்ன?” (What congress and Gandhi have Done to the Untouchables) என்பதோ நூலைத் தயாரித்த #பாஜக வுக்கு தேவையற்ற விசயங்கள். இந்தப் போட்டியின் மூலம் இந்துத்துவத்தை இளம் மனங்களில் நுழைப்பது ஒன்றே அவர்களின் குறிக்கோள்.