இலங்கை தொடக்க வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக படைத்த புதிய சாதனை!

நேற்று நடந்த போட்டியில் இலங்கை , ஆஸ்திரேலிய அணி மோதியது. போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறி

நேற்று நடந்த போட்டியில் இலங்கை , ஆஸ்திரேலிய அணி மோதியது. போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறி கொடுத்து 334 ரன்கள் குவித்தனர்.பின்னர் இறங்கிய  இலங்கை அணி 45.5 ஓவர் முடிவில் 247 ரன்கள் சேர்த்து இலங்கை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  டிமுத் கருணாரட்ன, குசல் பெரேரா களமிறங்கினர்.ஆட்டம் தொடத்தில் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்நிலையில் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி எதிரான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வரிசையில் டிமுத் கருணாரட்ன, குசல் பெரேரா முதல் இடம் பிடித்தனர்.நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக இவர்கள் கூட்டணியில் 115 ரன்கள் குவித்தனர்.இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச ரன் இதுவே.115 – K Perera/Karunaratne, 201936 – Atapattu/Tillakaratne, 200330 – Fernando/Wettimuny, 197526 – Jayasuriya/Tharanga, 200721 – Atapattu/Jayasuriya, 2003