அமெரிக்காவில் UBER நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் பெண் பலி!

உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

unknown node

உபேர் நிறுவனம் தானியங்கிக் கார்களை சோதனை முறையில் இயக்கி வருகிறது. தானியங்கிக் கார்கள் போக்குவரத்து சூழலுக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இயங்கவல்லவை என்று கூறப்படும் நிலையில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் காரில் முதல் முறையாக விபத்து நேர்ந்துள்ளது. அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ்((Phoenix)) நகரின் புறநகர்ப் பகுதியில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் சென்று கொண்டிருந்த போது சாலை யைக் கடக்க முயன்ற 49 வயதுப் பெண் ஒருவர் மீது மோதியது.

unknown node

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உபேர் நிறுவனம் பல்வேறு பகுதிகளில் தானியங்கிக் கார்களை நிறுத்திவைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.