நெருங்கும் புயல்! வேகத்தை அதிகரித்த ஃபெஞ்சல்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது.

Cyclone Fengal Speed Increased

சென்னை :வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலானது மாமல்லபுரம் – புதுச்சேரி இடையேயான பகுதியில் கரையை கடக்க உள்ளதால் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதுவரை மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது தனது வேகத்தை அதிகரித்து கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 12கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 140 கிமீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 150 கிமீ தொலைவிலும் நிலைகொண்டு நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.