சென்னை :தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவில் இருந்து வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், போரூர், ராயபுரம், திருவொற்றியூர், நந்தனம் தரமணி, அடையாறு உள்பட பல இடங்களில் கனமழை பெய்கிறது.
இந்நிலையில், இந்த மழையை பார்த்து பயப்படவேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தகவலை தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பெய்யும் கடைசி மழை இதுவாக தான் இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மேகங்கள் தற்போது ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளன. எனவே, மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது. ” என வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார்.
unknown node