#JUSTNOW: கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் டிஸ்சாஜ்.!

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு இன்று பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யபட்டார் .
77 வயதான இவர் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொண்ட பின் பாசிடிவ் உறுதி செய்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போதுகொரோனாவிலிருந்து மீண்டு முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மணிப்பால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யபட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
பின்னர் அவரை இது குறித்து முதல்வரே ட்வீட் செய்துள்ளார். உங்களது விருப்பங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிலையில் நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சுய-தனிமைப்படுத்தலில் இருப்பேன்.
மேலும் உங்கள் பாசத்திற்கும் ஆதரவிற்கும் ஆழ்ந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக விரைவில் வழக்கத்திற்கு திரும்புவதை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025