கேரளாவில் இன்று 26,701 பேருக்கு கொரோனா தொற்று..!

கேரள மாநிலத்தில் இன்று 26,701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 26,701 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 28,900 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,37,996 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,496 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 791 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025