கரணம் தப்பினால் மரணம்! ரீல்ஸ்காக இப்படியா பண்ணுவீங்க?

viral video

புனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதும் அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நடனமாடி கொண்டும் வித்தியாசமாக ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியீட்டு வருகிறார்கள். ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சில வீடியோ எரிச்சல் அடைய வைத்துவிடும்.

அப்படி தான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனத்தை தூண்டியுள்ளது. புனே – ஜம்புல்வாடி சுவாமிநாராயண் மந்திர் அருகே பழமையான கட்டிடம் ஒன்று இருக்கிறது. அந்த கட்டிடத்தின் மேற் பகுதியில் பெண் ஒருவர் ஏறிக்கொண்டு ஒருவருடைய கையை பிடித்து கீழே தொங்கி கொண்டு இருந்தார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மெயின் ரோட்டை ஒட்டி ஒரு உயரமான கட்டிடம் இருப்பதை காணலாம். அந்த கட்டிடத்தில் ரீல்ஸ் செய்ய இரண்டு இளைஞர்களும் ஒரு இளம் பெண்ணும் வருகிறார்கள். அதற்கு முன்னதாக மூவரும் ஒன்றாக கட்டிடத்தில் ஏறினர். அந்த காட்சிகளை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென அந்த பெண் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டு கீழே இருக்கும் ஆழத்தை உணராமல் தொங்கினார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அந்த பெண் தொங்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் ஒரு ரீல்ஸ்காக இப்படியா பண்ணுவீங்க? எனவும் இது பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai