எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!
ஏப்.23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. இருப்பினும் நீங்கள் தொடங்கினாள் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது.
இந்த சூழலில், இன்று, ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த பிஎஸ்எஃப் (எல்லைப் பாதுகாப்புப் படை) வீரர் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று பிஎஸ்எஃப் செய்தியை வெளியிட்டுள்ளது. பூர்ணம் குமார் ஷா ஏப்ரல் 23, 2025 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸால் கைது செய்யப்பட்டார். இவரை எப்போது விடுதலை செய்வார்கள் என அவருடைய குடும்பத்தினர் காத்துகொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பூர்ணம் குமார் ஷாவை இன்று விடுதலை செய்தனர். போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் செய்த இந்த செயல் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினைகளில் ஒரு முக்கியமான தருணமாகவும் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பில், பூர்ணம் குமார் ஷாவை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்படைப்பு, இன்று காலை 10.30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சோதனைச் சாவடி வழியாக நடைபெற்றது. பூர்ணம் குமார் ஷாவின் குடும்பத்தினர், அவரது விடுதலை குறித்து மகிழ்ச்சியும் நிம்மதியும் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு, அவரது உடல்நிலை மற்றும் மனநிலையை பரிசோதிக்க மருத்துவக் குழுவை அமைத்துள்ளது. மேலும். இந்த ஒப்படைப்பு இரு நாட்டு அமைதிக்காகவும், சண்டை நிறுயக6 நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.