மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூரின் அசாம் ரைபிள்ஸுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்,

10 militants killed in Manipur

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் கொல்லப்பட்ட ஆயுத கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேல் மாவட்டத்தில் நேற்றிரவு (மே 14 அன்று) ஆயுதமேந்திய குழுவினர் நடமாட்டம் குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்ததாக கிழக்கு கட்டளை ஒரு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த கும்பல் கெங்ஜாய் தாலுகாவின் சம்டல் கிராமத்திற்கு அருகில் நகர்ந்து கொண்டிருந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் தீவிர தெடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர், அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்ததும் அசாம் ரைபிள்ஸ் படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். மோதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்