காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் தொடங்குகிறது.

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். காத்திருந்த அவர்களுக்கு இன்ப செய்தியை கொடுக்கும் வகையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
மே 17-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணியும் – பெங்களூர் அணியும் மோதுகிறது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் போட்டி நடக்குமா? என்று சந்தேகம் எழும் வகையில் திடீரென நேற்று பெங்களூரில் கனமழை பெய்தது. சின்னசாமி மைதானத்தில் கனமழை பெய்து தண்ணீர் குளம்போல் கட்டியிருந்ததை வீடியோ காட்சிகள் மூலம் பார்த்திருந்தோம்.
எனவே, இதேபோலவே இன்று மழை பெய்தால் போட்டி நடப்பது என்பது சந்தேகமான விஷயமாக இருந்தது. ஆனால், நேற்று இரவு மழை நின்று வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இன்று வானிலை அங்கு தெளிவாக இருப்பதன் காரணமாக இதுவரை மழை பெய்யவில்லை. எனவே, போட்டி நடைபெறுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
பெங்களூர் : விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (C), ஜிதேஷ் சர்மா(wk), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் சர்மா
கொல்கத்தா : சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ்(WK), அஜிங்க்யா ரஹானே (C), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மொயின் அலி, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா