RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!
பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், இன்றைய தினம் இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது.
இதில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதே நேரம், கொல்கத்தா அணி மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியும்.
இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு டாஸ் போடப்படுகிறது, போட்டி இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி, இப்பொது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதா, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் மைதானம் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே சிறந்த மழைநீர் வடிகால் இருக்கும் மைதானம் இது என்பதால் மழை நின்றால் உடனடியாக தண்ணீர் வடிந்துவிடும். ஆனால் மழை நின்றபாடா தெரியவில்லை அதுதான் சிக்கல், ஒருவேளை மழை நின்றால் உடனே டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்படும். ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.