LSG vs GT: குஜராத்தை சமாளிக்குமா லக்னோ அணி.? டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் விவரம்.!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் ஏற்கனவே தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வென்று தனது முதலிடத்தை தக்க வைக்க போராடும். ஏனெனில், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கே பிளேஆஃபில் 2 வாய்ப்புகள் வழங்கப்படும். அதேபோல், பிளேஆஃப்பில் இருந்து வெளியேறினாலும், தங்களது வலிமையை நிரூபிக்க, லக்னோ போராடும்.
தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய போகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான அணியில், மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ஓர்ர்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ்:
கேப்டன் ஷுப்மான் கில் தலைமையிலான அணியில், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விளையாட்டு சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் குஜராத் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது, அதே நேரத்தில் லக்னோ அணி மோசமான நிலையில் உள்ளது. லக்னோ அணிஅணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதே நேரத்தில் 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, லக்னோ அணி தற்போது 7வது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025