”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!
நடிகர் சிலம்பரசன் தனது வரவிருக்கும் படமான STR 50 திரைப்படத்தில் பெண்மைப் பண்புகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை உறுதிப்படுத்துகிறார்.

சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது 50 திரைப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடிக்கிறார். அதன்படி Behindwood உடனான ஒரு நேர்காணலில் சிம்பு கூறியதாவது, இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
அதை எப்படி அணுகுவது என்பது குறித்து கமல்ஹாசன் சாருடன் கலந்துரையாடினேன். இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது தான் ஒரு நடிகரின் உண்மையான திறமை வெளிப்படும் என கூறியுள்ளார். இதன் மூலம் சிம்பு முதன் முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது 50வது படமான இந்த படம், அவரது சொந்த நிறுவனமான அட்மேன் சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கப்படும். தான் ஏன் தயாரிப்பாளராக மாறினார் என்பது குறித்து சிம்பு கூறுகையில், “நானே தயாரிப்பது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் கற்பனை செய்யும் மாதிரியான சினிமாவை சமரசம் இல்லாமல் என்னால் உருவாக்க முடியும்” என்றார்.
‘STR 50’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து அறிவிக்கப்பட்டது . இருப்பினும், அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணைந்துள்ள ‘STR 50’ படத்தில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.