டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்கிற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.

ENGvIND - ShubmanGill

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். பர்மிங்காம் மைதானத்தில் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் கில்லின் முதல் இரட்டை சதமாகும். 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

நிதானமாக விளையாடிய கில் இங்கிலாந்து அணியின் பத்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய கில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து இங்கிலாந்தை கலங்கடித்துள்ளார்.  இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஷுப்மான் கில் தான். இதுவரை எந்த ஆசிய கேப்டனும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை ஷுப்மான் கில் பெற்றுள்ளார்.

அவருக்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு 193 ரன்கள் எடுத்த இலங்கையின் திலகரத்ன தில்ஷன் தான் இந்த சாதனையை செய்திருந்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய கேப்டன் ஒருவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்பு, இங்கிலாந்தில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கேப்டன் முகமது அசாருதீன் ஆவார். அவர், 1990-ல் மான்செஸ்டர் டெஸ்டில் 179 ரன்கள் எடுத்தார். ஆசிய கேப்டனின் சாதனை இலங்கையின் திலகரத்ன தில்ஷனின் பெயரில் இருந்தது. 2011-ல் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் 193 ரன்கள் எடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்