அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்கியுள்ளது.

Edappadi Palaniswami - Z +

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இதில், குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும்.

அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது கவனிக்கத்தக்கது. Z+ பாதுகாப்பு என்பது இந்தியாவில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு வகைகளில் ஒன்றாகும், இது முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள சூழலில் வழங்கப்படுகிறது.

அதன்படி, Z+ பாதுகாப்பு பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் மிரட்டல் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Z+ பாதுகாப்பு

24/7 கண்காணிப்பு மற்றும் மூன்று அடுக்கு பாதுகாப்பு. 55 காவலர்கள், இதில் தேசிய பாதுகாப்பு படை (NSG) கமாண்டோக்கள், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அடங்குவர். 10+ NSG கமாண்டோக்கள் உயர் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்