கூலி படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்! காரணம் என்ன? லோகேஷ் உடைத்த உண்மை!

சௌபின் சாகிர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பஹத் பாசில் தான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

coolie fahadh faasil

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அனிருத் இசையமைப்பில் வெளியான ‘கூலி’ படத்தின் முதல் பாடல், சமூக ஊடகங்களில் வைரலாகி, படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தில் ஷௌபின் ஷாஹிரின் கதாபாத்திரம் குறித்து சுவாரசியமான தகவலைப் பகிர்ந்தார். “ஷௌபின் சார் கதாபாத்திரம் ஆரம்பத்தில் அவருக்காக எழுதப்படவில்லை. மற்றொரு முன்னணி நடிகருக்காக இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி, ஆறு மாதங்கள் அதற்காக உழைத்தேன். ஆனால், அந்த நடிகர் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை,” என்று லோகேஷ் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் மலையாள நடிகர் ஃபஹாத் ஃபாசிலை அணுகியதாகவும் கூறினார். “நான் ஃபஹாத் ஃபாசில் சாரை அணுகினேன், ஆனால் அவரது தேதிகள் கிடைக்கவில்லை,” என்று லோகேஷ் குறிப்பிட்டார். ஃபஹாத் ஃபாசிலால் இந்தப் படத்தில் இணைய முடியாத நிலையில், இயக்குநர் லோகேஷ் மலையாள நடிகர் ஷௌபின் ஷாஹிரை அணுகினார்.“கடைசியாக ஷௌபின் சாரை அணுகினேன், அவர் உடனே ஒப்புக்கொண்டார். அவரது நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கு புது உயிர் கொடுத்தது,” என்று லோகேஷ் கனகராஜ் பாராட்டினார்.

ஷௌபின் ஷாஹிரின் நடிப்பு, ‘கூலி’ படத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ரேயாஸ் தல்பதே, மற்றும் ஷ்ருதி ஹாசன் ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த சுவாரசிய தகவல், ‘கூலி’ படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்