மருத்துவமனையில் இருந்து மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு ஒப்புதல் வழங்கினார்.

MKStalin

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினஙக்ளுக்கு முன், லேசான தலைச்சுற்றல் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

மூன்றாவது நாளாக இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொதிலும் முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் காணொலி மூலம் மக்களுடன் கலந்துரையாடினார்.

காணொளி வாயிலாக, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, இன்னும் சற்றுநேரத்தில் (இன்று மதியம்) ஸ்டாலின் உடல்நிலை குறித்த அப்டேட்டை அப்போலோ வெளியிடும் என்று அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்