முதல்வர் உடல் நிலை எப்படி இருக்கு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்.!
ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஹாஸ்பிடலில் இருந்தவாறே முதல்வர் பணி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் 3-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்தாலும், தினசரி தனது அலுவல் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அப்போலோ ஹாஸ்பிடலில் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மு.க.முத்துவின் மறைவு அன்று, நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல், நின்றவாரே இருந்ததால் முதல்வருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், முதல்வருக்கு சோர்வுதான் ஏற்பட்டிருக்கிறது.
பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை, முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார்” என்று கூறியிருக்கிறார். மேலும், முதல்வர் வீடு திரும்புவது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஜூலை 23, 2025) பிற்பகல் மேலும் தகவல் வெளியிடும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
July 23, 2025