100 நாள்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி.., சுற்றுப்பயண இலட்சினை வெளியீடு.!
பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ள உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” என்ற சுற்றுப்பயணத்தின் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாமக தலைவர் அன்புமணி நாளை மறுநாள் (ஜூலை 25) முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். திருப்பூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், தருமபுரியில் நவம்பர் 1ம் தேதியுடன் முடிக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப்பயணத்தின் முதல்கட்ட விவரம் வெளியானது. அதன்படி ஜூலை 25 திருப்போரூர், 26-ல் செங்கல்பட்டு, உத்தரமேரூர், 27-ல் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், 28-ல் அம்பத்தூர், மதுரவாயல், 31-ல் கும்மிடிப்பூண்டி, ஆக.1 திருவள்ளூர், திருத்தணிக்கும் பாமக தலைவர் அன்புமணி பயணக்கிறார்.
பாமக கட்சியில் தலைவர் பொறுப்பிற்காக அப்பா – மகன் மோதலுக்கிடையே அன்புமணியின் இந்த 100 நாள்கள் பயணம், அவரது செல்வாக்கை காண்பிக்கவே என கூறப்படுகிறது. மேலும், இந்தப் பயணம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே பாமகவின் கொள்கைகளைப் பரப்புவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
July 23, 2025