டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. வேகமாக சென்ற ஒரு ஆடி கார், சிவா கேம்ப் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரை மோதியது. பாதிக்கப்பட்டவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களான லதி (40), அவரது எட்டு வயது மகள் பிம்லா, கணவர் சபாமி என்ற சிர்மா (45), ராம் சந்தர் […]
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(a) மற்றும் பிரிவு 80(3) இன் கீழ், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன. உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர் மீனாக்ஷி […]
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில வினாடிகளில், சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகானி பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 241 பேர் உட்பட, தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். […]
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025 ஜூலை 9 காலை 7:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த பாலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாகும். விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் […]
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத், “75 வயதாகிவிட்டால், மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டீர்கள், இப்போது ஒதுங்கி, இளையவர்களை முன்னேற அனுமதிக்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேச்சு, அரசியல் தலைவர்கள் 75 வயதை எட்டிய பிறகு பதவியில் இருந்து விலகி, இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதாக இருந்தது. வரும் 2025 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 […]
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில், இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார், ஒரு வேன், ஒரு ஆட்டோரிக்ஷா, மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மேலும், நான்கு பேர் மாயமாகியுள்ளனர், அவர்களை கண்டறிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் (NDRF […]
கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை, மற்றும் வளர்ப்புக்கு தடை விதிக்கும் “கோவா விலங்கு வளர்ப்பு, பராமரிப்பு ஒழுங்குமுறை மற்றும் இழப்பீட்டு மசோதா 2025”ஐ ஒப்புதல் அளித்தது. முதலமைச்சர் பிரமோத் சாவந்த், இந்த மசோதா ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் கோவா சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த முடிவு, கோவாவில் […]
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசினார். திருப்பதியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியைத் தொடங்கி, தமிழ்நாடு அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் அரசியல் பயணத்தைப் பற்றி அவர் ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் “விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலுக்கு […]
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 10) காலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர். இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் […]
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர், இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு, ‘க்யூரஸ்’ (Cureus) இதழில் வெளியிடப்பட்டது, 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட இரு […]
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும், புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த விமானம் இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான ஜாகுவார் […]
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு வருகின்ற ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் […]
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வதோதராவையும் ஆனந்தையும் இணைக்கும் காம்பிரா பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 […]
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் 40 வருடங்கள் பழமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதனால் பாலம் திடீரென உடைந்து விழுந்தது என அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மேலும் பலி […]
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டம் மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நடைபெறுகிறது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். இதற்கு தமிழ்நாட்டில் தொமுச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட […]
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப் பிடிப்பதைக் காட்டுகிறது. பருத்திப்பள்ளி ரேஞ்சின் விரைவு […]
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் […]
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை பாஜக வாபஸ் பெற்ற நிலையில், போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியது. மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள், பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டம் வோர்லியில் உள்ள NSCI டோமில் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட […]
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 29 மருத்துவ மாணவர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் இடைக்கால நிவாரணமாக […]