வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே 21 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு குற்றச்சாட்டால் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஏனென்றால், சந்திப்பின்போது, டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறினார். “இனப்படுகொலை” என்றால், ஒரு இனத்தை முறையாக […]
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த 103 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், சுத்தமான குடிநீர் வசதிகள், நவீன கழிப்பறைகள் மற்றும் லிஃப்ட்/எஸ்கலேட்டர் வசதிகள்.இலவச வை-ஃபை, உணவு விடுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு […]
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கிப்பட்டி பாலத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்தப் பகுதியில் ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே […]
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்திற்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் 2025 மே 21 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில் நடைபெற்றது. இந்த நடவடிக்கை “ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-பிஜாப்பூர் எல்லையில் உள்ள […]
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 22-ஆம் தேதி முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே சமயம், தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 3-4 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே […]
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது மகத்தான சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்த கவுரவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம், வரும் ஜூன் 14, 2025 அன்று நடைபெறவுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு பல துறைகளில் சிறந்து […]
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து, அவரது 151 வெளிநாட்டுப் பயணங்கள் (72 நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு 10 முறை) மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்காதது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தொடர்ந்து வெளிநாட்டுப் […]
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் […]
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது. அந்த 4-வது இடத்திற்கு தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடுமையான போட்டி நடக்கிறது, ஏனெனில் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன, இது நான்காவது […]
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன என்பதை அறிந்துதான் சீட் கேக்க முடியும் என பேசியிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, சென்னையில் 2025 மே 20 அன்று அளித்த பேட்டியில், “இந்த தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் […]
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் […]
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக இப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மொத்தம் 3 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள […]
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு இந்தியா தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்படி கூறிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக […]
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் 12 மாவட்டத்துக்கு கனமழை வாய்ப்பு எனவும் 1 மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த […]
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால் அந்த சமயம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதுவரை 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைப்போல, நேற்று கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் […]
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை தான் பலரும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். விஷாலும் முன்னதாக இந்த மாதிரி கேள்விகள் வந்தாலே திருமணம் நடக்கும் என்பது போல மட்டுமே பதில் சொல்லிவிட்டு மழுப்பிவிட்டு சென்றுவிடுவார். ஆனால், சமீபகாலமாக அவருடைய பேட்டிகளை எடுத்து பார்த்தால் இந்த வருடம் நிச்சயமாக தான் திருமணம் செய்துவிடுவேன் என்பது போலவே பேசிவருகிறார். உதாரணமாக சென்னையில் […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது. ஆனால், இந்த கூட்டத்தை கட்சி தலைவர் அன்புமணி தொடர்ச்சியாக கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவதால் பாமக கட்சிக்குள்ளே குழப்பங்கள் நிலவுகிறது. இதனையடுத்து ஏற்கனவே, ” பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி […]
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர், தங்கள் தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் நகை மற்றும் பணத்திற்காக முதிய தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக விசாரணை செய்து […]