பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது.- என மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் உரையாற்றினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று முன் தினம் சென்ற அவர், நேற்று ஸ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அடுத்து, காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு […]
காஷ்மீர், ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் வருவதை ஒட்டி நேற்று காஷ்மீர் முழுக்க பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கட் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக நிர்வாகிகளுக்கு திமுக தான் இனி உங்கள் சாதி. தொண்டர்கள் தான் சாதிசனம். இனி வரும் காலம் சோதனை காலம் என புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முரோசொலி பத்திரிகை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக உட்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தலைவர் , பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரும் கழக பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில், திமுகவின் பத்திரிகையான […]
சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர். இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ […]
தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்குஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என தாமகா தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வளிமண்டலஅடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ‘ தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள […]
100 கோடியில் வள்ளலார் மையம் வடலூரில் அமைக்கப்படும். எனவும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசினார். இன்று சென்னையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவர் பேசுகையில், வடலூரில் 1000 கோடி செலவில் […]
வள்ளலார் 200வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் வள்ளலார் தபால் உறையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா, வள்ளலார் தர்மசாலை ஆரம்பித்த 156வது ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காண்பித்த 152வது ஆண்டு ஆகியவற்றினை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று கொண்டாடப்டுகிறது. இந்த முப்பெரும் விழாவானது சென்னை கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் கோவில் மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது . இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் […]
1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக […]
பொன்னியின் செல்வன் படம் பற்றிய பாராட்டு அறிக்கையில் திருச்சி சிவா, ‘ இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு வரவேற்பும், வசூலும் நல்லவிதமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் […]
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டார். 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார். பாதுகாப்பு கருதி பல்வேறு இடஙக்ளில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பியாக பணியாற்றி வந்த 57 வயதான ஹேமந்த் குமார் லோஹியா நேற்று அவரது வீட்டில் கழுத்து அறுபட்டு உயிரிழந்தார். ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா எனும் பகுதியில் தங்கி இருந்த ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டு இருந்துள்ளார். தகவல் அறிந்து […]
கோவை மாவட்ட தூய்மை பணியார்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வெகு நாட்கள் கோரிக்கையான வேலை நேரம், வார விடுமுறை, பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தூய்மை பணியாளர்களின் 2 நாள் போராட்டம் இன்று […]
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் இருந்து பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர்க்காவிடில், நாங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப கொடுத்துவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடியானது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , தனியார் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுங்க சாவடிகளில் வேலைபார்த்த சுமார் 25க்கும் மேற்பட்டோரை […]
தமிழகத்தில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் கருமுட்டை சேமிப்புக்கு 50,000 ரூபாயும், கருமுட்டையை செலுத்த 50,000 ரூபாயும், வாடகை தாய் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய பதிவு கட்டணங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு […]
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2,78 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் வருவாய்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 14ஆம் தேதி பரிசளிக்கப்பட்டு, முறையான நேர்காணல் நடத்தில்டிசம்பர் 19ஆம் தேதி பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உடன் மின்துறை ஊழியர்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்த பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி மின்சாரத்துறையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று வரை நீடித்தது. கடந்த ஞாயிற்று கிழமை புதுசேரி காவல்துறையினர் , துணை ராணுவபடையின் உதவியுடன் […]
நேற்று ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் சட்டமன்றத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு தங்களது 92 எம்.எல்.ஏக்கள் மூலம் தங்கள் பெரும்பான்மையினை நிரூபித்தார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. பக்வந்த் மான் அம்மாநில முதல்வர் பதவியில் இருக்கிறார். அம்மாநிலத்தில், பாஜக ‘ஆபரேஷன் தாமரை’ எனும் பெயரில் எம்.எல்.ஏக்களை விலை பேசுகிறது. ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி முன்வைத்தது. மேலும், இது குறித்து, பஞ்சாப் சட்டமன்றத்தில் நம்பிக்கை […]
இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 2-0 என்கிற நிலையில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. […]
அரியலூர் மாவட்டம் கீழமாளிகை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சக்திவேல். இந்த இளைஞன் கஞ்சா போதையில் அப்பகுதி கோவிலில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளார். சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புகுந்த சக்திவேல் அங்குள்ள சக்கரம், தேர் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள கேமராக்கள், மற்றும் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை சுற்றி […]
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது அசுரன் உருவமானது மகாத்மா காந்தி போல இருந்ததாக கூறி எழுந்த புகாரை அடுத்து, அந்த அசுரன் உருவம் மாற்றபட்டது. நாடு முழுவதும் இந்த வாரம் கொண்டாடப்பட உள்ள தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு கோவில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஓர் இந்து அமைப்பினர் துர்கா பூஜை ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் மஹீசாசூரன் எனும் அரக்கன் வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது. […]
10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மை நகரங்களின் பட்டியலில் மொத்தம் 45 இடங்களில் 42வது இடத்தில் கோவை, 44வது இடத்தில் சென்னை, 45வது இடத்தில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து, ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் சார்பில் தூய்மை நகரங்கள் பற்றிய வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘ சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க […]