ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
unknown nodeஅண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த வாகனத்தில் இரு சக்கரத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசனில் முன்சக்கரத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.
unknown nodeஇந்த மாடலுக்கு ஆன்ரோடு விலையாக 1.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மாடலானது மற்ற மாடலை விட 10,000ரூ அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசன் மாடலில் இருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
DINASUVADU