தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் – அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம்..!
தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, உருவாக்கப்பட்டன. மாதிரி […]