சோமேட்டோ நிறுவனம் பங்கு வெளியிட்ட சமயம் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் தெரிவித்துள்ளார்.
சோமேட்டோ நிறுவனமானது தங்கள் நிறுவன பங்குகளை வெளியிடும் சமயத்தில் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார் ஒரு முதலீட்டாளர்.
சோமேட்டோ நிறுவனம் தனது நிறுவன பங்குகளை வெளியிடும் போது, தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் என்பவர் அதன் பங்குகளை 100 கோடி ரூபாய் அளவுக்கு வாங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தாராம்.
ஆனால், அந்த சமயம் வெறும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மட்டுமே தனக்கு கிடைக்கவும், அந்த சமயம் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் தனது டோக்லபான் எனும் புத்தகத்தில் தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவர் கூறுகையில், நான் இறுதியில் சோமேட்டோ நிறுனவனத்தால் 25 லட்சத்தை இழந்தும் உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.