வார இறுதி நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.!

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை

Gold Price

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வார இறுதி நாளான இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

சென்னையில் (24. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,560க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,820க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.76.40க்கும், கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து ரூ.76,400க்கும் விற்பனையாகிறது.

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! 2 நாள் பயணத்தில் முக்கிய நிகழ்வுகள்!

சென்னையில் (23. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,795-க்கு விற்பனை ஆனது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.76-க்கு கிலோவுக்கு ரூ.76,000 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.