தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 உயர்வு.!

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை

gold price

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

முன்னதாக, ரூ.47 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து ரூ.46 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் (16. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்க்கும், 1 கிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!

சென்னையில் (15. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,920க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740க்கும் விற்பனையானது. அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசு அதிகரித்து ரூ.76க்கும், கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.