மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

gold price

சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (18-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.96.50க்கும், கிலோவிற்கு ரூ.4000 உயர்ந்து ரூ.96,500க்கும் விற்பனையாகிறது

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (17-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.