சென்னை :தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்து.
நேற்று தங்கம் விலை 5வது நாளாக ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.57,800-க்கு விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.600 உயர்ந்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ரூ. 7,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,840-க்கும், ஒரு கிராம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம், கடந்த 5-வது நாளாக வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.101ஆக விற்பனையாகி வருகிறது.
unknown nodegold 24 [File Image]
