Gold Price:ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 சரிந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,920க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,740க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.87.50க்கும், ஒரு கிலோ ரூ.87,500க்கும் விற்பனையாகிறது.
![Gold Silver Price file image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F03%2FGold-Silver-Price-file-image-2.webp&w=3840&q=75)