சென்னை :கடந்த மூன்று தினங்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலையில், இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், விலையிலேயே நேற்றுவரை விற்பனையானது. இன்றைய தினம் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,552-க்கும், கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.6,694-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
unknown nodetoday gold price [file image]24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. 58,424 ஆகவும் கிராம் ஒன்று ரூ.1 குறைந்து ரூ.7,303 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து, ஒரு கிராமுக்கு ரூ.93.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.93,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
