இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்....தங்கம் சவரன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது..

Good news for housewives .... Gold razor is less than Rs 35 thousand ..

சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ. 34,920 க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று குறைந்து காணப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 34,920 க்கு விற்பனையாகிறது.அதேபோல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,365 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.65.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.