தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, இன்று (ஜூன் 15) மாலை அந்த அணையை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் திறந்தார். மேட்டூர் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்பப்பட்ட நிலையில், விரைவான நீர் வரத்து இருப்பதால், கல்லணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே தண்ணீர் வந்துவிடும் எனவே, […]
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா நான்கு கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவடைந்தது. மாணவர்களின் கல்வி சாதனைகளை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் […]
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு விடுமுறை நாளான இன்று பலரும் வந்துள்ளனர். இந்நிலையில், இப்பாலம் திடீரென உடைந்து ஆற்றினுள் விழுந்துள்ளது. இதனையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 6 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கிருந்து படு காயமுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஒரு […]
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கம்டா அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) நேற்றைய தினம் அண்ணாநகரில் நகரின் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் செயல்படுத்தும் திட்டம் குறித்து பொது கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் CUMTA, GCC மற்றும் கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பல ஈரானிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் பல அணு ஆயுத இலக்குகளும் அடங்கும். இந்த விமானத் தாக்குதலில் முக்கியமான 20 ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பிற்பகலில் இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுத்தது. ஈரான் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இஸ்ரேலிய […]
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் இன்று டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இன்று (ஜூன் 15) காலை 11.10 மணிக்கு ரூபானியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி விமான விபத்து நடந்த நிலையில், டிஎன்ஏ (DNA) பரிசோதனையின் மூலம் இன்று காலை உடல் அடையாளம் காணப்பட்டதாக […]
சென்னை : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]
திருவள்ளூர் : பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே 2026-ல் ஆட்சி அமைக்கும் எனவும் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி கூறியுள்ளார். பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நீண்ட காலமாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தமிழகத்தில் சமூகநீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்களின் நலன் என எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை என்பதால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருக்கின்றனர் […]
விழுப்புரம் : ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், பூந்தமல்லியில் அன்புமணியும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை நீக்கம் செய்து, மாநில மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கரை புதிய பொதுச்செயலாளராக நியமித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வடிவேல் ராவணன், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கம் செய்துள்ளதோடு ராமதாஸ் விரைவில் பொதுக்குழுவை […]
சென்னை : ஜாக்டோ-ஜியோ அமைப்பு, பல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. சமீபத்தில், ஜாக்டோ-ஜியோவின் ஒரு நிர்வாகியான மாயவன் என்பவர் விஜய்யை சந்தித்ததாகவும், அவர்கள் அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பு இதை மறுத்து, விஜய்யுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று […]
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு , பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூன்று வெளி நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். முதலில், பிரதமர் மோடி சைப்ரஸை அடைவார். பின்னர் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இறுதியாக, அவர் குரோஷியாவிற்கும் செல்வார். குறிப்பாக, கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை […]
இஸ்ரேல் : இஸ்ரேல் – ஈரான் இடையே பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 329 பேர் காயமடைந்துள்ளனர். நள்ளிரவுக்கு பின் வான் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியது. ஈரானின் அணு ஆயத திட்டங்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில் ஈரானின் IRGC […]
விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்படி இருக்கையில், இன்று தந்தையர் தினம் என்பதால், ‘தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்’ என்று அன்புமணி ராமதாஸின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ” “தியாக […]
சென்னை : தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் இறுதிகட்ட நிகழ்வில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகளை வழங்கி வருகிறார். 4ஆம் கட்டமாக நடக்கும் நிகழ்வில் 39 தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு விஜய் பரிசளித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். மாணவி ராஜேஸ்வரி, ஜே.இ.இ (JEE) அட்வான்ஸ்ட் தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடத்தைப் பிடித்து, சென்னை ஐ.ஐ.டி-யில் […]
உத்தரகாண்ட் : விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை 5.30 மணியளவில் கேதர்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானி, பக்தர்கள் என 7 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, சார் தாம் பகுதியில் இயங்கும் ஹெலிகாப்டர் […]
சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியின் சார்பாக இன்று சென்னையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எம்பியான அவருக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு சில பரிசுகளையும் அன்பாக கொடுத்தனர். ஒரு ரசிகர் கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமாருடன் இருக்கும் […]
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இன்று “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் […]
சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக […]
அமெரிக்கா : ரியாக்சன் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான யூடுயூபர்களில் ஒருவர் ‘ஐ ஷோ ஸ்பீடு’. இவர் ரன்னிங் ரேஸிலும் சிறப்பாக ஓடக்கூடிய ஒருவர் என்பது அவரை பின்தொடர்ப்போருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரை யூடியூப்பில் மட்டும் 40 மில்லியனிற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவரை போலவே காலையில் சீக்கிரம் எழுந்து ஐஸ் வாட்டரில் முகம் கழுவும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் Ashton Hall (ஆஷ்டன் ஹால்). இவருக்கும் யூடியூப்பில் 3 மில்லியனிற்கும் […]