சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில், கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் நாளை (ஜூலை 1) முதல் சென்னையில் இவ்விரு நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவகங்களிடம் இருந்து சராசரியாக 30% வரை ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் கமிஷன் வசூலிப்பதாகவும், சற்று பெரிய உணவகமாக […]
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண […]
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த இளைஞரின் 17 வயது சகோதரனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் அஜித்குமார் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் காவல்துறையின் செயல்பாடுகள் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் வெளிப்படையான மற்றும் […]
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர், 2025 ஜூன் 27 அன்று நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணை நடத்தக் கோரி முறையீடு செய்து, காவல்துறை மற்றும் அரசு தரப்புக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் பலரும் இதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை இது குறித்து பேசாமல் இருந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து பணிமனையிலிருந்து தொடங்கி வைத்தார். இந்த மின்சாரப் பேருந்துகள், உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் (சி-சஸ்ப்) முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மின்சாரப் பேருந்துகள் (Low-Floor Electric Buses) நகரப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டவை. இந்நிலையில் பேருந்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கும் […]
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையேயான 12 நாள் போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஜூன் 24, 2025 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த பின்னர், இஸ்ரேல் காசாவில் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 2025 ஜூன் 28 அன்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “காசாவில் ஒரு வாரத்திற்குள் போர் […]
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17, 2025 அன்று அரசாணைகள் (GR) பிறப்பித்திருந்தது. இந்த முடிவு, மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியை கட்டாயப் பாடமாக்குவதாக இருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகளான ஷிவசேனா (யு.பி.டி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS), மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) உள்ளிட்டவை கடும் […]
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை கோயம்பேட்டில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இதில், தனது தந்தையும் கட்சி நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தை, நடிகர் விஜய்யுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். “கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய் வேறு. கேப்டன் மக்களுக்காக வாழ்ந்தவர், அரசியலில் தனி பாதையை உருவாக்கியவர். அவரை வேறு யாருடனும் ஒப்பிடுவது தவறு,” என அவர் திட்டவட்டமாகக் […]
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக பத்வா (மத ஆணை) பிறப்பித்துள்ளார். “இவர்கள் இஸ்லாமிய உலகத்திற்கு எதிரானவர்கள், அவர்களை எதிர்க்க வேண்டும்,” என உலக முஸ்லிம்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நடந்த மோதல்களுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்த பத்வா, ஜூன் 2025-ல் நடந்த 12 நாள் போருக்கு பதிலாக வெளியிடப்பட்டது. இஸ்ரேல், […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து பணிமனையிலிருந்து தொடங்கி வைக்கிறார். இந்த மின்சாரப் பேருந்துகள், உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் (சி-சஸ்ப்) முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மின்சாரப் பேருந்துகளில் பயணிகளுக்கு சி.சி.டி.வி கண்காணிப்பு கருவிகள், லக்கேஜ் வைப்பதற்கு பிரத்யேக இடம், செல்போன் […]
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக, சமீபத்தில் கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார். மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், 2025 ஜூன் 29 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பாமகவில் நிலவும் உட்கட்சி மோதல் குறித்து கருத்து தெரிவித்தார். “அன்புமணியின் பின்னால் இருப்பது […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடந்த ஜூன் 25 அன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆர்.ஜி.கார் […]
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகையும், 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் இலங்கை கடற்படை அதிகாரிகள். மன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதான […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தியுள்னர். தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி, திருப்புவனம் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். […]