பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல். ராமநாதபுரம் அருகே, சமுகம் வலைத்தளம் மூலம் பெண்கள் ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின நிலையில், சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரித்ததில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறித்து வந்ததும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போலி முகவரிகளை காட்டி, மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் […]
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனி, இப்ராகிம் மற்றும் நைனார் பாத்திமா மூன்று பேரும் வாட்சப் மூலம் அவதூறு பரப்பியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், எஸ்.பி.பட்டினம் போலீசார் இவர்கள் மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர். சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 15 லட்சத் தொகையை கருணாஸ் வழங்கி உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் அதிதீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் மின்னல் வேகமாக பரவி வரும் தொற்றை தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், சமூக இடைவெளியை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டு தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருந்த போதும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.124 பேர் தமிழகத்தில் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாதிப்பு […]
ராமநாதபுர மாவட்டத்தில் 3 திருமணங்களை செய்ததாகக் கூறும் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை 4வதாக ஒரு நபர் வந்து சொந்தம் கொண்டாடியதால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் குழம்பி நிற்கின்றனர். நடிகர் வடிவேலு காமெடியில் வருவது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.இந்த குழப்பமான சம்பவம் ஆனது ராமநாதபுரத்தை அடுத்த கோரவள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய 8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு புகார் […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பாலும் திமுக முன்னிலையில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு வேட்பாளர்கள் வாக்கு சமநிலையில் இருந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, குலுக்கல் முறையில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் […]
மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கு பணியாற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பின்னர் குழந்தையுடன் பெண்ணும் இறந்ததை கேட்ட உறவினர் போராட்டத்தில் இறங்கினர். ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ஆவார்.இவரது மனைவி கீர்த்திகா ஆவார்.இவர் கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கீர்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரசவவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கு வேலை பார்க்கும் செவிலியரே பிரசவம் பார்த்துள்ளனர். […]
2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தற்போது நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட நான் சம்பளம் வாங்காமல் பணியை செய்ய தயார் என்று தமிழக தலைமை காவலர் சுபாஷ் சீனிவாசன் கடிதத்தின் மூலம் விருப்பம் தெரிவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்னும் மருத்துவ மாணவி பேருந்தில் பயணிக்கும் போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. அதை தொடர்ந்து நிர்பயா […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து கொட்டி தீர்த்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழைப் பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு இன்றைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலை தெரிவித்துள்ளது. கடந்த […]
ராமநாதபுரம் மாவட்டம் வலசையயை சார்ந்தவர் ரம்யா(21) கர்ப்பணியாக உள்ள இவருக்கு கடந்த 17-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து இவர் உச்சிபுளி அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ரம்யாவிற்கு 19-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.அப்போது மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளார்.பிரசவத்திற்கு பிறகு தாயும் ,சேயும் நலமாக இருந்து உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாள்கள் கழித்து ரம்யாவிற்கு வயிற்று வலியுடன் ரத்த கசியும் ஏற்பட்டது.இதை தொடர்ந்து ரம்யாவை […]
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும் கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு […]
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள கடலோர ஊர்களில் கடல் நீர் உள்வாங்கியது இதனால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்தனர். இது எதனால் எனவும் குழப்பமடைந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் கடல்நீரானது சுமார் 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி தரை தட்டியது. இதனால் பல படகுகள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கியில் நேற்றிரவு பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். மேலும் வங்கியை சில நாட்களாக சந்தேகிக்கப்படும் வகையில் இருவர் நோட்டமிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்ளை நடைபெறாததால், கூட்டுறவு வங்கியில் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள், முக்கிய பத்திரங்கள் தப்பித்தன என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் கல்குண்டு எனும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் மின்மோட்டாரை இயக்கும் பொத்தான் சரிவர வேலை செய்யததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் கார்த்தீஸ்வரன் எனும் மாணவன் அந்த மின்மோட்டாரை ஆன் செய்கையில் மின்சாரம் தாக்கி அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் அழகர்குளம் கிராமத்தை சேர்ந்த நயினார் முகமது என்பவரின், மகன் முகமது அமீர் (13). இவருக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இடதுகால் செயலிழந்ததோடு, தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மதுரை மருத்துவமனை சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரித்த நிலையில், அந்த சிறுவனை ராமநாதபுரம் மருத்துவமனையில், அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை உடனடியாக, மேல் சிகிச்சைக்காக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி என்ற ஊரில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன், தனது தொழில் தொடங்குவது சம்பந்தமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நான்கு என அனைவரும் நட்பாக பழகி உள்ளனர். பிறகு, அவரை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த […]
இலங்கை வழியாக தமிழ்நாட்டினுள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000 போலீசார் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக கோயம்புத்தூரில் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புறநகர் பகுதியில் இருந்து கோவை திருப்பூர் செல்லும் பகுதியில் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் கடல் எல்லை பகுதில் ரோந்து பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிமிஸ் (8) ,சூர்யா (8) சூரிய இவர்கள் இருவரும் அங்குள்ள ஊருணியில் விளையாடி கொண்டிருந்தபோது உருண்டையான ஒரு பொருள் இருப்பதை பார்த்து இருவரும் அந்த பொருள் பந்து என நினைத்து தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. நல்ல வேலையாக தூக்கி எறிந்தபோது மேலே குண்டு வெடித்ததால் அந்த சிறுவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இந்த […]