சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவலை கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சுற்றுப்பயணம் தஞ்சாவூரில் தொடங்கி, 42 நாட்களில் 38 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது, தவெகவின் மாவட்ட […]
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, அரசியல் பயணத்தில் இணையவிருப்பதாகவும், பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோடியாக, அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, அவரது அரசியல் நுழைவுக்கு முக்கிய […]
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார். பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை தகவல் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 25) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான […]
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள் மாநாட்டில், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தந்தை பெரியார் (ஈ.வி.ராமசாமி) மற்றும் சி.என்.அண்ணாதுரையை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவில், பெரியார் மற்றும் அண்ணாதுரையை இழிவாக சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், மாநாட்டில் “திராவிட இயக்கத்தை அழித்து தெய்வீக தமிழ்நாடு” உருவாக்க வேண்டும் என்று கூறும் பதாகைகளும், திராவிட […]
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த நிலையில், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல் திடீரென நடந்ததாகவும், முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையின் முழு பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். […]
சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அணு ஆயுதங்களால் தகர்க்க முடியாத ஒன்று, இந்தியாவில் சாதிய கட்டமைப்புகளாக உள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுள் தான.. கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது, ஆங்கிலேயர் ஆட்சிக்கு […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் 24, 2025 அன்று அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 651 மீனவர்கள் ஈரானில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இந்த மீனவர்கள், வளைகுடா பகுதியில் மீன்பிடி வேலைக்காகச் சென்று, தற்போதைய போர்ச்சூழலால் அங்கு சிக்கியுள்ளனர் என்று தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின், “ஈரானில் […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது. விழாவில் பேசிய அவர் ” பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்” என தெரிவித்திருந்தார். அண்ணாமலை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பதில் அளிக்கும் விதமாக பேசி […]
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் நீலகிரி, காட்மாண்டுப் பகுதிகள் அல்லது கோயம்புத்தூர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு […]
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக, பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மாணவருக்கு மதிப்பெண்களை மாற்றுவதற்கு 90 லட்சம் ரூபாய் வரை கோரப்பட்டதாகவும், பணம் செலுத்தினால் மதிப்பு மாற்றப்பட்ட மதிப்பெண்கள் […]
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக […]
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக […]
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி அதிர்ச்சி அளித்து வருகிறார். அந்த வகையில், இப்பொது சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளராக இருந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவின்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சதாசிவத்திற்கு பதிலாக ராஜேந்திரன் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு பொது நல மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ் குமார், இந்த உத்தரவை பிறப்பித்தார். பொது மக்கள் பயன்படுத்துவதால் கழிப்பறைகளின் பராமரிப்பு பாதிக்கப்படுவதாகவும், இது பெட்ரோல் நிலையங்களுக்கு நிதிச்சுமையாக உள்ளதாகவும் எரிபொருள் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. […]
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின் மொழிக் கொள்கையை விமர்சித்து, “ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி, ஹிந்தி திணிப்புக்கு எதிரான அவரது நிலைப்பாட்டையும், ஆங்கிலத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தையும், தாய்மொழிகளின் அவசியத்தையும் வெளிப்படுத்தியது. மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த சீமான் ” மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு, தமிழர் […]
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது நலப் பணிகள் மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொண்டு, இந்த நாளை சிறப்பித்தனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றி பார்ப்போம். பாஜக தமிழக […]
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டு ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பேட்டி, திருச்சி […]